வியாழன், 11 பிப்ரவரி, 2010
‘மை நேம் இஸ் கான்’ படத்துக்கு எதிர்ப்பு!
ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ்கான் படம் நாளை வெளியாகிறது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா தொண்டர்கள் அந்த படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.ஷாருக்கான் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதை தொடர்ந்து சிவசேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 1,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மை நேம் இஸ் கான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது அனைவரும் ஒற்றுமையுடன், அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இதுவாகும். எல்லாம் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆகும். இதற்காக வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றார்.
இதற்கிடையே ஷாருக்கானின் கருத்துக்கு நடிகையும், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளருமான ஷில்பாஷெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தை தெரிவிக்க உரிமை இருக்கிறது. இது அடிப்படை உரிமையாகும். படத்துக்கு ஏன் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.
இந்தி சினிமாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித நேயம் என்ற முறையில் ஷாருக்கானுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக