திங்கள், 15 பிப்ரவரி, 2010

இந்தியர்களுக்கான மாணவர் விசா- தடை


இந்தியர்களுக்கான மாணவர் விசா- தடையை ஓரளவு தளர்த்தியது இங்கிலாந்து
லண்டன்: வட இந்திய மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்த இங்கிலாந்து அரசு தற்போது அந்தத் தடை யை நீக்குவதாக அறிவித்துள்ளது. அதேசமயம், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் விசாவை வழங்காமல் நிறுத்தி வைப்பது என்ற முடிவு தொடரும் என அது அறிவித்துள்ளது.

வட இந்திய மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்குவதை திடீரென சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைத்தது இங்கிலாந்து அரசு. இதனால் இங்கிலாந்தில் படிக்க விரும்பி விண்ணப்பித்திருந்த ஆயிரக்கணக்கான வட இந்திய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்தத் தடையில் ஒரு பகுதியை விலக்கிக் கொண்டுள்ளது இங்கிலாந்து அரசு.

இதுகுறித்து இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் பாட் மெக்பாடன் கூறுகையில், குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய அளவில் விண்ணப்பிங்கள் குவிந்த காரணத்தால்தான் விசாக்களை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இருப்பினும் மார்ச் 1ம் தேதி முதல் இந்தத் தடை நீக்கப்படுகிறது. உயர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விசாக்கள் வழங்கப்படும்.

அதேசமயம், இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் விசா வழங்குவது தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக