செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
அதிக வருவாய் கிடைக்கும் யூலிப் திட்டம்: ரிலையன்ஸ் இன்ஷ்யூரன்ஸ்.
அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஆயுள் காப்பீடு நிறுவனம், அதிகபட்சம் இலாபம் கிடைக்கும், பங்குச் சந்தையுடன் இணைந்த காப்பீடு திட்டத்தை வெள்ளிக் கிழமை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், ஆயுள் காப்பீடு பாலிசிகளுக்கு செலுத்தும் பிரிமியத்தில் ஒரு பகுதியை, பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன. இந்த வகை காப்பீடு திட்டங்கள் யூனிட் லிங்க் இன்ஷ்யூரன்ஸ் பிளான் என்றும், சுருக்கமாக யூலிப் என்றும் அழைக்கப்படுகிறது.
தற்போது ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள யூலிப் திட்டம் குறித்து, இதன் தலைவர் மலாஸ் கோஷ் கூறுகையில், இந்த திட்டம் இதன் 10 வருட கால கெடுவுக்குள், காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு அதிக பட்ச வருவாய் கிடைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சம் காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள யூனிட்டின் மதிப்பு தினசரி கணக்கிடப்படுகிறது.
இந்த திட்டம் காப்பீடுதாரர்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதில் கட்டப்படும் பிரிமியம் நிர்வாக கட்டணம் தவிர மீதமுள்ளவை அதிக பட்சம் வருவாய் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.
இதில் இரண்டு விதமாக பணம் கட்டலாம். ரெகுலர் ஆப்ஷன் திட்டத்தின் படி வருடத்திற்கு குறைந்த பட்சம் ரூ.20 கட்ட வேண்டும். இதை மாதாமாதம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஆறு மாதத்திற்கு ஒரு முறை என செலுத்தலாம்.
ஒரே தடவையில் கட்டும் திட்டத்தின் படி, குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும். இநத காப்பீடு திட்டத்தை 30 நாள் குழந்தை முதல் 65 வயது வரை உள்ளவர்கள் செய்து செய்து கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக