புதன், 17 பிப்ரவரி, 2010

மருந்து உற்பத்தி ரஷியா ஆர்வம்!


மருந்து தயாரிப்பில் இந்திய நிறுவனங்களின் ஒத்துறைப்பை பெறுவதில் ரஷியா ஆர்வம் காட்டியுள்ளது.

இந்தியா வந்துள்ள ரஷிய துணைப் பிரதமர் நேற்று ரஷ்ய துணைப் பிரதமர் செர்ஜி சோபியானின், தொழில்- வர்த்தக துறை அமைச்சர் விக்டர் கிரிடன்கோ ஆகியோர், மத்திய தொழில்-வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவை சந்தித்துப் பேசினார்கள்.

அப்போது இருநாடுகளுக்கும் இடையே இருந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை குறிப்பிட்ட அமைச்சர் ஆனந்த் சர்மா, வர்த்தகம், இதர துறைகளில் இருதரப்பு கூட்டுறவு தொடர்ந்து நிலவி வரும் என்று நம்பிக்க தெரிவித்தார்.

இந்திய மருந்து கம்பெனிகளிடமிருந்து ஒத்துழைப்பு பெறுவதில் ரஷ்யா தரப்பில் மிகுந்த ஆர்வம் காட்டப்பட்டது அப்போது ஆனந்த் சர்மா, மருந்து தயாரிப்புத் துறையில் இந்திய நிறுவனங்கள் சிறந்து விளங்குவதை எடுத்துக் காட்டினார்.

ரஷ்ய நிறுவனங்களுடன், இந்திய நிறுவனங்கள் கூட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

விண்வெளித் துறை, உரங்கள் துறை உள்ளிட்ட துறைகளில் ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு நிலவி வருவதை சுட்டிக்காட்டிய ஆனந்த் சர்மா, இத்துறைகளில் மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தக துறை செயலாளர் ராகுல் குல்லார் உள்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே 2009 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இருதரப்பு வர்த்தகம் 2188.12 மில்லியன் டாலர்கள் அளவிற்கு உள்ளது. இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதியான மருந்து, ரசாயனங்கள், தேயிலை, போக்குவரத்து சாதனங்கள், இயந்திரங்கள், காபி, பருத்தி நூல் உள்பட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ரஷியாவில் இருந்து பெட்ரோலியம், உரங்கள், இரும்பு, உருக்கு, நிலக்கரி, கோக், செயற்கை இழை ரப்பர், அச்சு காகிதம் முதலியவை அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக