ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

வருமான வரி பட்டியல்...


மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று மக்களவையில் தாக்கல் செய்த 2010-11 பட்ஜெட்டால், வருமான வரி செலுத்துபவர்களில் 60 விழுக்காட்டினருக்கு, ஒரு வகையில் சலுகை கிடைத்துள்ளது.

தற்போது ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை உள்ள வருவாய்க்கு வருமான வரி இல்லை. இதில் எவ்வித மாற்றமும் இல்லை.

1 லட்சத்து 60 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து, ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

5 லட்சத்து 1 ரூபாயில் இருந்து, ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு ரூ.3 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

(முன்பு ரூ.3 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

ரூ.8 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு..

65 வயதிற்குள் கீழ் உள்ள பெண்கள் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.

(முன்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.)

1 லட்சத்து 90 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 1 லட்சத்து 90 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் 10 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.)

5 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 3 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் 20 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.)

ரூ. 8 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.

(முன்பு ரூ.5 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி செலுத்த வேண்டும்.)


65 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு

ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.

(முன்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.)

2 லட்சத்து 40 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 2 லட்சத்து 40 ஆயிரத்து 1 ரூபாய் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

5 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 3 லட்சத்து 1 ரூபாய் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 20 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

8 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது.

(முன்பு 5 லட்சத்திற்கு மேல் 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்பட்டது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக