செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தேவைய‌ற்ற உணவுக‌ள் வே‌ண்டா‌ம்


சிக்கன் ப்ரை, ஐ‌ஸ்க்ரீம், சாக்லேட், பாம் ஆயில், பப்‌ஸ், உருளை வறுவல் போன்றவை குழந்தையின் மூளையை மந்தமாக்கி விடும்.

குழந்தை‌யி‌ன் செய‌ல்பாடுக‌ள் ம‌ந்தமாக இரு‌ந்தா‌ல் டி‌ஸ்லெக்சியா எ‌ன்ற நோ‌ய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு 2 விதம். ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.

சாதாரண வயிற்றுப் போக்கின்போது வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும். பாலை மறுக்கும், அழுது கொண்டே இருக்கும்.

கிருமியால் விளைந்த வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, குழந்தைகள் படுத்தபடியே ஓய்வெடுக்க வேண்டும்.

கேர‌ட்டை வேகவை‌த்து அதனை கூழா‌க்‌கி, வ‌யி‌ற்று‌‌ப் போ‌க்கு‌ ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு கொடு‌ப்பது ந‌ல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக